Published : 31 Jul 2016 06:33 PM
Last Updated : 31 Jul 2016 06:33 PM
மும்பை அருகே பிவாண்டியில் தொடர் மழையால், 2 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
மும்பை அருகே உள்ள பிவாண்டியில் சாந்தி நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட கைபி நகரில் 2 மாடி குடியிருப்பு இன்று திடீரென இடிந்து விழுந்தது.
தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 27 பேரை மீட்டனர். ஆனால், 9 பேர் உடல் நசுங்கியும், மூச்சுத் திணறியும் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!