மத்திய - மாநில அரசுகள் இடையே விரைவில் மும்மொழிகளில் தகவல் தொடர்பு?

மத்திய - மாநில அரசுகள் இடையே விரைவில் மும்மொழிகளில் தகவல் தொடர்பு?
Updated on
2 min read

மத்திய மாநில அரசுகள் இடையி லான தொடர்பு மொழி குறித்து அமைக்கப்பட்ட நிபுணர் குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதில் மும்மொழி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாநில அரசுகளுக்கு ஈமெயில் மற்றும் கடிதங்கள் மூலம் உத்தரவு கள் மற்றும் பல்வேறு முக்கியத் தகவல்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. இவற்றை குறிப் பிட்ட மொழியில் தான் அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவு எதுவும் இருப்பதாக தெரிய வில்லை. மேலும் தமிழகம் உள் ளிட்ட சில மாநிலங்களில் நிலவும் இந்தி எதிர்ப்பால் அம்மொழி அடிப் படையிலான ஒரு கொள்கையை மத்திய அரசால் எடுக்க முடியாமல் உள்ளது. தற்போது மத்திய அரசால் மாநிலங்களுக்கு அனுப் பப்படும் தகவல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. சில சமயம், இந்தி பேசும் மாநிலங் களுக்கு மட்டும் இந்தியில் அனுப் பப்படுகிறது. தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில் அனுப்பப்படுகிறது. ஆனால் நிதி மற்றும் வருவாய் துறைகளுக்கு மட்டும் நாடு முழுவதிலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுகிறது.

சீரற்ற இந்தக் கொள்கையை சீராக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள் ளது. 17 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவுக்கு டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கபில் கபூர் தலைவராக உள்ளார். இக்குழு வின் அறிக்கை விரைவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத் திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அக்குழுவின் உறுப்பினர்கள் வட் டாரம் கூறும்போது, “ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழி என 3 மொழிகளில் தகவல் அனுப்புவது தான் பொருத்தமாக இருக்கும். இதில் மாநில மொழி களுக்கும் சம உரிமை அளிக்கப்படு வதால் எதிர்ப்பு கிளம்ப வாய்ப் பில்லை. எனினும் முறையான மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப் பாடு நம் நாட்டில் நிலவுவதால் இந்த மும்மொழி திட்டத்தை அமல் படுத்துவதில் சிக்கல்கள் வர வாய்ப் புள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத் தின் 8-வது அட்டவணையில் தமிழ் உட்பட மொத்தம் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயன் படுத்தப்பட்டு வரும் இந்த மொழி களை மத்தியிலும் ஆட்சி மொழி களில் ஒன்றாக அறிவிக்க வேண் டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு மற்றும் மாநிலங் களுக்கு இடையில் தகவல் தொடர்புக்காக மும்மொழிகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதன் மூலம் மாநில மொழிகளையும் மத்திய அரசு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இது மாநில மொழிகளுக்கு கிடைக்கும் புதிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல் கலைக்கழகத்தின் நவீன இந்திய மொழிகள் துறைத் தலைவர் து.மூர்த்தி கூறும்போது, “மேலோட்டமாகப் பார்க்கும் போது இது தமிழ் உட்பட மாநில மொழிகளுக்கு ஆதரவானதாகப் பார்க்க முடிகிறது. இதில் மாநில மொழியுடன் சேர்த்து இந்தியையும் கட்டாயமாக அனுப்பினால், அது எதிர்காலத்தில் இந்தியை மட்டுமே இணைப்பு மொழியாக அமல்படுத்துவதற்கான அபா யத்தை உண்டாக்கும். இதுபோன்ற சர்ச்சைக்கு எட்டாவது அட்டவணை யில் உள்ள 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவித்து விடுவதே தீர்வாக இருக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in