

தேவயானி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த இளம்பெண்ணின் தந்தை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். ஆனால், காங்கிரஸுக்குத்தான் இதில் பெரிய பிரச்சினை உள்ளது. தேர்தல்களை முன்னிறுத்தியே காங்கிரஸ் இப்போது பிரச்சினையாக்குகிறது.
மாநில பிரச்சினையான இதில் மத்திய அரசு தலையிட்டால் வரம்புமீறிய செயலாகிவிடும். இதுபோன்ற அநாகரிரமான செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.