

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆள்ளகட்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களின் பேராதரவு கொண்டவர் ஷோபா நாகி ரெட்டி. இவர் இத் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார். இதில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரச்சாரம் முடிந்து இரவு வீடு திரும்பும் போது கார் விபத்தில் மரணமடைந்தார். ஆயினும் இவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த ஷோபா நாகி ரெட்டியின் மகள் அகிலப்ரியா வேட்பாளராக நிறுத்தப் பட்டார். முக்கிய கட்சிகள் போட்டியிடாத தால் அகிலப்ரியா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.