காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம்

காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம்
Updated on
1 min read

தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கனஅடி தண்ணீரை 10 நாட்களுக்கு வழங்கவேண்டும் என்று காவிரி மேற்பார்வைக்குழு நேற்று உத்தரவிட்டது. இதை த்கண்டித்து கர்நாடகாவில் நேற்று போராட்டங்கள் நடந்தன.

காவிரி மேற்பார்வைக் குழு வின் உத்தரவைத் கண்டித்து கர்நாடகாவில் பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய இடங் களில் கன்னட அமைப்பினரும் விவசாய அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக -தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் கூட்டமைப் பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சியினரும் காவிரி மேற்பார்வை குழுவின் உத்தர‌வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத் துறை மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே துணை ராணுவ படை, மத்திய பாதுகாப்பு படை, கர்நாடக போலீஸார் உட்பட 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியபோது, “கர்நாடகாவில் குடிப்பதற்கே நீர் இல்லாதபோது, தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க முடியாது. காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவை ஏற்க முடியாது. எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு தமிழகத்துக்குக் காவிரி நீரை திறக்கக் கூடாது. இதனால் ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை. காங்கிரஸாருடன் சேர்ந்து நாங்களும் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறோம்'' என்றார்.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், “காவிரி யில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது. காவிரி மேற்பார்வை குழுவின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்''என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

கர்நாடகா- தமிழகம் இடையே பரபரப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் காவிரி நீரை திறந்துவிட முடியாது என்றும் கர்நாடகாவில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக வாதிடப்படும் என தெரிகிறது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அனைத்து மதுபான கடைகளும் மூடப் படும். பெங்களூரு, மண்டியா வில் தனியார் பள்ளி, கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சிவாஜி நகர், அல்சூர், ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in