

மகாராஷ்டிரத்தில் வரும் புதன்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை ரூ. 14.5 கோடி ரொக்கம், 2.8 லட்சம் லிட்டர் மதுபானங்களை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரப்படி, இம் மாநிலத்தில் ரூ.14 கோடியே 52 லட்சத்து 37,876 ரொக்கம், ரூ.75.99 லட்சம் மதிப்புள்ள 2.8 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வேட்பாளர்களிடம் இருந்து ரூ.4.8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர தேர்தலில் சட்டவிரோத மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தை தடுப்பதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய்த் துறை ஊழியர்களை தேர்தல் ஆணையம் கண் காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.