

விவசாயிகள், ஏழைகள், தலித் மக்கள், வேளாண்மை, கிராமங் கள் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள் ளது. அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். விவசாயிகளின் வருவாய் இரட்டிப் பாகும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
இந்த பட்ஜெட் எதிர்காலத்துக் கான பட்ஜெட். விவசாயிகள், ஏழை எளிய மக்களின் நலன், வெளிப்படைத்தன்மை, ஊரக வளர்ச்சி, நகரங்கள் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் நல்ல பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உரு வாகும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும்.
கிராமங்களில் நிலவும் பொரு ளாதார சூழ்நிலைகளில் இந்த பட்ஜெட் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நடுத்தர மக்களின் வருவாயை உயர்த்தும். ரயில்வே துறையை நவீனப்படுத்துவது முதல் பொருளாதார சீர்திருத்தம் வரை, கல்வித் துறை முதல் சுகாதாரத் துறை வரை, தொழில்முனைவோர் முதல் தொழிற்சாலைகள் வரை என அனைத்து தரப்பு கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் தெளிவான முறையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை சாதனைக்குரியது. கறுப்புப் பணம் மற்றும் ஊழலை அடியோடு வேரறுக்கும் வகையிலான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் வலுவாக எதிரொலிக்கிறது. வரி ஏய்ப்புகளைக் குறைத்து, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தி டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான விரிவான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
தனிநபர் வருமான வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டதன் மூலம் குறைவான ஊதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பயன்பெறுவர். ஊழல் மிகுந்த அரசியலைத் தூய்மைப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட்டில் முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வந்து சேரும் நன்கொடை விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுபட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டதன் மூலம், ரயில்வே துறையின் வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.