

ஆம் ஆத்மி எம்.பி. பாக்வந்த் மான் சிங், நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளி யிட்டதன்மூலம், நாடாளுமன்றத் துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டார் எனக் கூறி, பாஜக, அகாலி தளம் உட்பட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஒத்திவைக் கப்பட்டன.
ஆம் ஆத்மி எம்.பி. பாக்வந்த் மான், தனது வீட்டிலிருந்து நாடாளு மன்றத்துக்குள் செல்லும் வரையிலான நடவடிக்கைகளை வீடி யோவாக எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். சுமார் 12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், அவரின் நேரடி வர்ணனையுடன் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடந்து, அவரது வாகனம் நாடாளுமன்றத்தில் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படம்பிடிக்கக் கூடாது எனக் கூறுவதும், மான் அதற்கு பதில் சொல்வதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மேலும் நாடாளு மன்றத்துக்குள் கேள்விகள் எழுப் பப்படும் அறைக்குள் அவர் நுழை கிறார். அங்குள்ள நடைமுறை களையும் அவர் விளக்குகிறார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாக்வந்த் மான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின.
மக்களவை கூடியதும் தேஜ கூட்டணி எம்.பி.க்கள் இதுதொடர் பாக பிரச்சினை எழுப்பினர். இது பாதுகாப்பு விதிமுறை மீறல் என குற்றம்சாட்டினர். பாஜக, அகாலி தளம், சிவசேனா கட்சி எம்.பி.க்கள், “நாடாளுமன்ற வளாக பகுதி, பாதுகாப்பு நடைமுறைகளை வீடியோவாக எடுத்து பகிர்ந்து கொண்ட பாக்வந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
பாஜக எம்.பி. கிரித் சோமையா, பாக்வந்த் மானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி னார். மற்றொரு எம்.பி. ஆர்.கே.சிங், “உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தினார். பிஜு ஜனதா தளம் எம்.பி. மகதாப், தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத் தார். சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ், பாக்வந்தை உடனடியாக நீக்க வலியுறுத்தினார். அதிமுக எம்.பி. குமார், இப்பிரச்சினையில் மக்களவை அவைத் தலைவர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இவர்களுடன் காங்கிரஸ், இடது சாரி எம்.பி.க்களும் இணைந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த அமளியின் போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, பதவி உயர்வில் இட ஒதுக் கீடு மசோதா தாக்கல் செய்வதற்கு தாமதமாவதைச் சுட்டிக்காட்டி கோஷம் எழுப்பினர். அமளி நீடித்த தால், மக்களவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை 12 மணிவரை ஒத்தி வைத்தார்.
மன்னிப்பு கோரினார்
இந்த ஒத்தி வைப்பு நேரத்தின் போது, சுமித்ரா மகாஜனைச் சந்தித்த பாக்வந்த் மான் அவரிடம் மன்னிப்பு கோரினார். முன்னதாக அவரிடம் விளக்கம் கோரி சுமித்ரா மகாஜன் சம்மன் அனுப்பியி ருந்தார்.
பாக்வந்த் மானின் மன்னிப்புக் கடிதத்தில், “இது விதிமுறை மீறல் என எனக்குத் தெரியாது. நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று தவறு நிகழாது” எனத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அவை கூடியதும், சுமித்ரா மகாஜன், “இது மிகவும் தீவிரமான விவகாரம். இதுதொடர் பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 2001, டிசம்பர் 13-ல் நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதை நினைவுகூர்ந்த அவர் 13 பேர் தம் இன்னுயிரைத் தியாகம் செய்து நாடாளுமன்றத்தைப் பாதுகாத்தனர் என தெரிவித்தார்.
எனினும் அமளி தொடர்ந்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாநிலங்களவையிலும் இப்பிரச் சினை தொடர்பாக கடும் அமளி ஏற் பட்டதால், மதியம் 2.40 மணி முதல் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.