Published : 19 Sep 2016 10:31 AM
Last Updated : 19 Sep 2016 10:31 AM

உ.பி. தேர்தலுக்காக ‘பரிவர்தன்’ யாத்திரை: அடுத்த மாதம் தொடங்க பாஜக திட்டம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி அடுத்த மாதம் ‘பரிவர்தன்’ யாத்திரை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையின் நிறைவு விழா வில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத் தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தான் மாறி, மாறி ஆட்சியில் அமர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவும், காங்கிரஸும் ஆட்சியைப் பிடிக்க மும்முரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் சார்பில் அதன் துணைத் தலைவரான ராகுல் ‘காட் பே சர்ச்சா’ என்ற பெயரில் ரத யாத்திரையைத் தொடங்கி நடத்தி வருகிறார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் விரைவில் யாத்திரை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் பாஜகவும் மாநிலம் தழுவிய ‘பரிவர்தன்’ யாத்திரை நடத்த முடிவு செய் துள்ளது. அதன்படி லலித்பூர், சோன்பத்ரா, கோரக்பூர் அல்லது பாலியா மற்றும் சஹரன்பூர் ஆகிய நான்கு இடங்களில் இருந்து ஒரே சமயத்தில் இந்த யாத்திரையைத் தொடங்கி பின்னர் பொதுவான ஒரு இடத்தில் ஒன்று கலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ஆகியோ ரும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம் மாண்ட பொதுக்கூட்டமும் நடத் தப்படவுள்ளது. யாத்திரையின் போது மாநிலத்தில் உள்ள 91 மாவட்டங்களிலும் இளைஞர் கள் மற்றும் பெண்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள், பிரதமர் மோடி செயல்படுத்திய நலப்பணிகள், சமாஜ்வாதி கட்சி யின் மோசமான நிர்வாகம், முந்தைய மாயாவதி ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஆகியவற்றை இந்த யாத்திரையின்போது மக்கள் மன்றத்தில் முன் வைப் போம்’’ என தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x