

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் 4 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மணீஷ் மேத்தா ஜம்முவில் நேற்று கூறும்போது, ‘‘பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அதிகாலை 3 மணி முதல் தாக்குதல் நடத்தியது. நமது வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை’’ என்றார்.