Published : 26 Jun 2016 14:33 pm

Updated : 14 Jun 2017 13:48 pm

 

Published : 26 Jun 2016 02:33 PM
Last Updated : 14 Jun 2017 01:48 PM

கருப்பு பணத்தை கணக்கில் காட்ட செப். 30 தான் கடைசி நாள்: பிரதமர் மோடி எச்சரிக்கை

30

கணக்கில் காட்டாத வருவாய், பணம், சொத்து வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அரசிடம் முழு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது அவர்களுக்கான கடைசி வாய்ப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டில் கருப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து கணக்குகளை அரசிடம் சமர்ப்பிக் கலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி உரையான ‘மன் கீ பாத்தில்’ குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

இதுவரை கணக்கில் காட்டாத வருவாய், பணம், சொத்து வைத் திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-க்குள் தேதிக்குள் முழு விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் அபராதத் தொகையை செலுத்தி தங்களை விடுவித்துக் கொள்ளலாம்.

கணக்கில் காட்டப்படாத வரு வாயின் ஆதாரம் குறித்து எவ்வித கேள்வியும் கேட்கப்படாது என்று ஏற்கெனவே உறுதி அளித்திருக் கிறேன். இது அருமையான வாய்ப்பு. இதை தவறவிட வேண்டாம்.

கணக்கில் காட்டப்படாத வரு வாய் ஆதாரங்களை காலக் கெடுவுக்குள் சமர்ப்பித்துவிடுங்கள் என்று பாஜக எம்.பி.க்களிடம் தெளிவாக கூறிவிட்டேன். அதற்குப் பிறகு அவர்களுக்கு எவ்வித உதவியோ, சலுகையோ நிச்சயம் அளிக்கப்படாது.

ஒரு காலத்தில் வரி செலுத்து வதை தவிர்க்க முயன்றார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. பெரும்பான்மை மக்கள் வரி செலுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால் இன்றும் ஒரு சிலர் மட்டும் வரிசெலுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

அவர்களுக்கு சில அறிவுரை களை கூற விரும்புகிறேன். அரசு விதிகளின்படி முறையாக வரி செலுத்துங்கள். இல்லையென்றால் உங்களின் மனஅமைதி, நிம்மதி தொலைந்து போகும். சாதாரண நபர்கள்கூட உங்களை மிரட்டுவார் கள். நீங்கள் நேர்மையாக இருந் தால் யாருக்கும் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

வரி செலுத்தாதவர்களை திருடர் களாக பாவிக்கக்கூடாது. அவர் களை சட்டத்தை மதித்து நடப் பவர்களாக மாற்ற வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்.

இந்தியாவின் மக்கள்தொகை 125 கோடி. இதில் 50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள் பிரிவில் 1.5 லட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. சிறிய, பெருநகரங்களில் ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள் ஏராளம் உள்ளனர். எனது சகோதர, சகோதரிகள் தாமாகவே முன்வந்து வரியைச் செலுத்த வேண்டும்.

கடுமையான முடிவுகளை எடுக்கும் முன்பு மக்களிடம் தெரியப் படுத்த வேண்டியது என் கடமை.

இருண்ட காலம்

‘மன் கீ பாத்’ வானொலி உரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதில் எனக்கு வருத்தம் இல்லை. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கி றோம். அதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். ஜனநாயகம் தான் நமது பலம். அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

கடந்த 1975 ஜூன் 26-ம் தேதி இந்தியாவின் இருண்ட காலம். அப் போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. மக்களின் உரிமை கள் நசுக்கப்பட்டன. பத்திரிகை அலுவலகங்கள் மூடப்பட்டன. ஜெய் பிரகாஷ் நாராயண் உட்பட ஆயிரக் கணக்கான அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டு மொத்த நாடும் சிறைச்சாலையாக மாறியது.

இன்று அதே ஜூன் 26-ம் தேதி உங்களிடம் பேசுகிறேன். மக்களின் பலம்தான் அரசின் வலிமை. ஒவ் வொரு குடிமகனின் உரிமைகளை யும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

தேர்தலில் வாக்களித்து ஓர் அரசை 5 ஆண்டு காலம் அரியணை யில் அமர்த்துவது மட்டும் ஜனநாய கம் அல்ல. அது ஜனநாயகத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். மக்களைப் பற்றி அரசு நினைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக எனது அரசின் செயல் பாடுகள் குறித்து மதிப்பீடு செய்ய அரசு இணையதளத்தில் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளிலும் இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பெரும்பான்மை மக்கள் அரசின் செயல்பாடுகளை மதிப்பிட்டு வாக் களிக்கின்றனர். அதன் முடிவுகளை ஊடகங்கள் அலசி ஆராய்கின்றன. இதுதான் உண்மையான ஜன நாயகம்.

யோகாவின் பலன்கள்

சர்வதேச யோகா தினத்தில் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் யோகா முகாம்கள் நடத்தப்பட்டன. யோகா மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து பொதுமக்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஓராண்டு காலம் தொடர்ந்து யோகா பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடிமன் கீ பாத்வானொலி உரைகணக்கில் காட்டாத வருவாய்ஐடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x