

நம் நாட்டில் பசி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை போக்க புதுமையான வழியில் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவை இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் கவுரவிக்க உள்ளார்.
இதற்கான விழா லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அங்கித் கவத்ரா, கடந்த 2014-ம் ஆண்டு அந்தப் பணியை உதறிவிட்டு
‘ஃபீடிங் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் வீடுகள், ஹோட்டல்கள், கேன்டீன்கள் மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவைப் பெற்று, அதை தேவைப்படுவோருக்கு விநியோகித்து வருகிறார்.
5 பேருடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு. தற்போது நம் நாட்டின் 43 நகரங்களில் 4,500 தன்னார்வலர்களுடன் செயல் படுகிறது. இதுவரை 85 லட்சத் துக்கும் மேற்பட்டோருக்கு தேவையான உணவு, குழந்தை கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோ ருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அரசியின் கவுரவமிக்க இளம் தலைவர்கள் விருதுக்கு அங்கித் கவத்ரா தேர்வு செய்யப்பட்டுள் ளார். அங்கித் கவத்ராவுடன் 53 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 60 பேரும் இந்த விருதை வரும் 29-ம் தேதி பெறவுள்ளனர்.
“இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை எனக்கு அளிக் கப்பட்ட மிகப்பெரிய கவுரமாகக் கருதுகிறேன்” என்று அங்கிக் கவத்ரா கூறியுள்ளார்.