

இதுவரை 2.16 கோடி போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து முடக்கியுள்ளதாக மக்களவையில் நுகர்வோர் விவகார இணை அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி தகவல் அளித்தார்.
கேள்வி நேரத்தில் அவர் இன்று கூறும்போது, “34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 60% ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
சுமார் 2.16 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன, இதனால் ரூ.13,000 கோடி அளவிலான பயன்கள் உண்மையில் தகுதியுள்ளவர்களைச் சென்றடையும்.
ரேஷன் அட்டைகள் டிஜிட்டல் மயமாக்கம் நிறைவடைந்து விட்டது” என்றார்.
பால் கலப்பட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சவுத்ரி, இதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதே கேள்விக்கு பதில் அளித்த மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறும்போது, அரசு இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது என்றார்.