

ஜம்மு காஷ்மீரைத் தாண்டி வடஇந்திய மாநிலங்களிலும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாகிதீன் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசை உளவுத் துறை எச்சரித்துள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு படை யினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு, பொதுமக்களை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் தூண்டி வருகின்றன. இதில் முக்கிய அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன், ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே வடஇந்தியாவில் உள்ள விமானப் படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக உ.பி.யின் ஆக்ரா, பரேலி, லக்னோ, கான்பூர், கோரக்பூர், காஜியாபாத் ஆகிய 6 இடங் களில் உள்ள விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உளவுத் துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து அந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, உ.பி. மற்றும் உத்தராகண்ட் மாநிலங் களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அங்கு பிரச்சாரக் கூட்டங்கள் மூலம் எளிதில் ஊடுருவ முடியும் என ஹிஸ்புல் முஜாகிதீன் கருதுகிறது. நேபாளம் வழியாக இம்மாநிலங் களில் நுழைவதும் எளிது என அங்குத் தாக்குதலுக்கு திட்டமிட் டுள்ளது. இதன்மூலம், காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் கிளப்புவது அவர்கள் எண்ணமாக உள்ளது. இவர்களுக்கு இந்தியத் துணைக் கண்டத்தின் அல்காய்தா கிளை உதவ முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அடங்கிய ஐக்கிய ஜிஹாத் கவுன்சிலின் தலைவராக இருப்பவர் சையது சலாவுத்தீன். இவரது தலைமையில் ஜம்மு-காஷ்மீரின் விடுதலைக்கு என ஹிஸ்புல் முஜாகிதீன் தொடங்கப்பட்டது.
இதனால் ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே தாக்குதல் நடத்துவ தில்லை என்ற கொள்கையைத் தாங்கள் கொண்டிருப்பதாக ஹிஸ்புல் கூறி வருகிறது. எனினும் டெல்லியில் செங்கோட்டை மற்றும் நாடாளுமன்ற தாக்குதலில் இதன் பங்கு இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வட மாநிலங்களில் தாக்குதல் நடத்த ஹிஸ்புல் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு அல்காய்தா உதவியை நாடியுள்ளதாகவும் தெரியவந் துள்ளது.
அல்காய்தா இந்திய துணைக் கண்டத்தின் தலைவராக இருப்ப வர் மவுலானா அசீம் உமர். பாகிஸ் தானின் ஐஎஸ்ஐ அமைப்பால் வழிநடத்தப்படும் அசீம், மேற்கு உ.பி.யின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனால் அவருக்கு உ.பி. முழுவதிலும் சுற்றிய அனுப வத்துடன் அம்மாநில மக்களுடனும் நல்ல தொடர்பும் உள்ளது.
முசாபர் நகர், ஷாம்லி ஆகிய அண்டை மாவட்டங்களில் மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட வர்களைத் தீவிரவாதப் பாதைக்கு இழுக்கும் பணியில் அசீம் ஏற் கெனவே ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே அல்காய்தா உதவியை நாட ஹிஸ்புல் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.