

நர்மதையை காப்போம் இயக்கத்தின் (என்பிஏ) தலைவர் மேதா பட்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை டெல்லி நீதிமன்றம் ரத்து செய்தது.
அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாததை கண்டித்து அவருக்கு எதிராக கைது உத்தரவை டெல்லி பெருநகர நீதிமன்றம் கடந்த மே 29-ம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி மேதா பட்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விக்ராந்த் வைத், முந்தைய தனது உத்தரவை ரத்து செய்தார். மேதா பட்கரும் என்சிசிஎல் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவரான வி.கே.சக்சேனாவும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் சட்டப்போரில் ஈடுபட்டுள்ளனர். தனக் கும் தனது அமைப்புக்கு எதிராகவும் விளம்பரங்கள் வெளியிட்டதாகக் கூறி வி.கே.சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மேதா பட்கருக்கு எதிராக 2 அவதூறு வழக்குகளை வி.கே.சக்சேனா தொடர்ந்தார்.