Last Updated : 20 Jan, 2016 08:43 AM

 

Published : 20 Jan 2016 08:43 AM
Last Updated : 20 Jan 2016 08:43 AM

160 கி.மீ. வேக விரைவு ரயில் சேவை: டெல்லி - ஆக்ரா இடையே விரைவில் தொடக்கம்

டெல்லி ஆக்ரா இடையே 160 கி.மீ வேகத்தில் செல்லும் நாட்டின் முதல் அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. சோதனை அடிப்படையில் ஓராண் டுக்கு இந்த ரயில் சேவை இயக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஆக்ரா இடையே 160 கி.மீ., வேகத்தில் செல்லும் நாட்டின் முதல் அதிவேக விரைவு ரயில் சேவையை தொடங்க ரயில்வே முடிவு செய்தது. இதற்காக இந்த மார்க்கத்தில் அடையாளம் காணப்பட்ட விபத்து பகுதிகளில் வேலிகள் அமைக்கப்பட்டன.

மேலும் விபத்துகளை தடுக்க லெவல் கிராஸிங் அகற்றப்பட்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மார்க்கத் தில் இரு முறை 160 கி.மீ வேகத் தில் ரயில் இயக்கப்பட்டு சோதிக் கப்பட்டது. இதில் ரயில்வே அதிகாரி கள் முழு திருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த மார்க்கத்தில் 160 கி.மீ வேகத்தில் செல்லும் கதிமன் விரைவு ரயில் சேவையை தொடங்க நிபந்தனை அடிப்படையில் ரயில்வே பாது காப்பு ஆணையம் ஒப்புதல் அளித் துள்ளது. ஓராண்டுக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கலாம் என்றும் அதன் வெற்றியை தொடர்ந்து ரயில் சேவையை நீட்டிப் பது குறித்து பின்னர் முடிவெடுக்கப் படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்புதல் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து பெறப் பட்டதும், கதிமன் விரைவு ரயில் சேவை தொடங்குவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என ரயில்வே அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார். அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டால் டெல்லி ஆக்ரா இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் 45 நிமிடமாக குறையும் என கூறப்படுகிறது.

கான்பூர் டெல்லி, சண்டிகர் டெல்லி, ஹைதராபாத் சென்னை, நாக்பூர் பிலாஸ்பூர், கோவா மும்பை மற்றும் நாக்பூர் செகந்திராபாத் உட்பட 9 மார்க்கங் களிலும் அதிவேக ரயில் சேவையை தொடங்க ரயில்வே துறை திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண் டிருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x