எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கிகளை வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், ''பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு 82 மி.மீ. மற்றும் 120 மி.மீ கொண்ட பீரங்கிகள், தானியங்கி துப்பாக்கி மற்றும் சிறிய ரக ராக்கெட் குண்டுகளால் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்தை மீறி இந்திய ராணுவ நிலைகள் மீதும், எல்லைப் பகுதியில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in