

பிரதமர் மோடியின் கொச்சி வருகையை முன்னிட்டு மாட்டிறைச்சி திருவிழா நடத்திய கேரள இளைஞர் காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர்.
மாநிலத்தின் முதல் மெட்ரோ ரயில் சேவையைத் துவக்கி வைக்க கொச்சி வந்துள்ள பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, மாட்டிறைச்சி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மோடி பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்துக்கு வெகு அருகில், தெற்கு கடற்படை முனையத்துக்கு அருகிலிருந்த பகுதியில் விழா நடத்தப்பட்டது.
மாட்டிறைச்சியை சமைத்துப் பரிமாறிய கேரள இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.
மாட்டிறைச்சி மற்றும் மாடுகள் விற்பனை மீதான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியபோது, அதைக் கடுமையாக எதிர்த்த மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.