

சென்னை பொறியியல் கல்லூரி யில் படித்த இளைஞர், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத் துள்ளார் என்று சிறப்பு நீதிமன் றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரி வித்துள்ளது.
சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு உலக நாடுகளில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவிலும் இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிர வாத இயக்கத்தில் சேர்ந் துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. மேலும், ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சிலரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சூடானில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட முகமது நசீர் என்ற இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அவருடைய தந்தை அமீர் முகமது போக்கரிடமும் விசாரணை நடத் தினர். இந்நிலையில், அமீரை முக்கிய சாட்சியாக வைத்து நசீருக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமர்நாத் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு தமிழகத் தில் உள்ள தவ்ஹீத் ஜமாத் (டிஎன்டிஜே) அமைப்பில் நசீர் (23) சேர்ந்துள்ளார். இஸ்ரேல், விஎச்பி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு களுக்கு எதிரான கருத்துகளை பரப்பி வந்துள்ளார். அதன்பின்னர் 2014-ல் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் உலகள வில் ஜிகாதிகளின் நடவடிக்கைகள் குறித்து எழுத தனி இணைய தளத்தை உருவாக்கி உள்ளார்.
சென்னை கல்லூரியில் பொறியி யல் முடித்த பின்னர் வேலைக்காக கடந்த 2014-ம் ஆண்டு துபாய் சென்றுள்ளார். அங்கு இணைய தளம் மற்றும் கிராபிக்ஸ் வடிவ மைப்பு வேலை செய்துள்ளார். ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தில் சேர்வதற்காக, வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து தனது பாஸ்போர்ட்டை திருடி உள்ளார். மேலும் நிறுவனத்துக்கு எந்த தகலும் சொல்லாமல் சூடான் சென்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி 2015-ல் வாட்ஸ் அப் குரூப் அட்மினாக இருந்த கரண் ஹமிதான் என்பவருடன் நசீருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த குரூப் இஸ்லாம் கேள்வி பதில் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது. அதன்பின்னர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ‘லோகோ’ உருவாக்க தொடங்கி உள்ளார். ஏப்ரல் மாதம் டெலிகிராம் மெசேஜ் ஆப்பில் இணைந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.
அதன்பின் ஆகஸ்ட் 2015-ல் ‘மேட் முல்லா’ என்பவருடன் நசீருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்தான் நசீரை சூடானுக்கு வரும்படி கூறியுள்ளார். துபாயில் பணியாற்றி வந்த நசீர், செப்டம்பர் 2015-ல் அங்கிருந்து விமானத்தில் சூடான் சென்றுள்ளார்.
சூடான் சென்ற பிறகு 2015 அக்டோபர் 5-ம் தேதி தனது தந்தை அமீருக்கு பல தகவல்களை மெயில் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளார். அதில், தான் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக சூடான் வந்துள்ள தாக தெரிவித்துள்ளார். மேலும், ‘‘அம்மாவை பார்த்துக் கொள்ளுங் கள். நான் இங்கு பத்திரமாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று மெயில் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் நசீரின் நடவடிக்கைகள் தெரிந்து 2015-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி சூடான் அதிகாரிகள் நசீரை கைது செய்தனர். பின்னர் டிசம்பர் 10-ம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தினர்.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதி களுடன் சேர்ந்து மகன் நசீர் போரிட போவதை அறிந்து துபாயில் இருந்த அமீர் உடனடியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவருடைய வாக்குமூலங்கள் 164 கிரிமினல் குற்றப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. நசீருக்கு எதிரான ஆதாரங்களில் அவருடைய தந்தை நசீர்தான் முக்கியமானவர். நசீருக்கும் அமீருக்கும் இடையில் நடந்த வாட்ஸ் அப் உரையாடல் மற்றும் இமெயில்கள் பலமான ஆதாரங் களாக உள்ளன.
இவ்வாறு அந்த குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 9-ம் தேதி குற்றப்பத்திரிகை குறித்து பரிசீலிக்கப்படும் என்று சிறப்பு நீதிபதி அமர்நாத் உத்தரவிட்டார்.