Last Updated : 25 May, 2017 09:55 AM

 

Published : 25 May 2017 09:55 AM
Last Updated : 25 May 2017 09:55 AM

குமாரசாமி வீட்டில் வருமான வரி சோதனை: பண மோசடி செய்ததாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் - பாஜக பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் கடந்த 2001- 2007 காலக்கட்டத்தில் சட்ட விரோத மாக சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக அப்போதைய முதல் வர்கள் தரம் சிங் (காங்கிரஸ்), குமாரசாமி (மஜத) உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் கடந்த வாரம் குமாரசாமியிடம் விசாரணை நடத்தினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குமாரசாமி, பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தனக்கு சொந்த மான நிறுவனங்களின் வருமானம் தொடர்பாக பொய் கணக்கு காண்பித்து அதிகளவில் பண மோசடி செய்துள்ளதாக குமாரசாமி மீது வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் உள்ள குமாரசாமியின் வீடுகள் மற்றும் கட்சி, திரைப்பட தயாரிப்பு அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

சுமார் 6 மணி நேரம் வரை இந்த சோதனை நீடித்தது. அப்போது நிறுவனங்களின் வருமானம் குறித்து குமாரசாமியிடம் அதிகாரி கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, ‘‘கர்நாடகா வில் விரைவில் தேர்தல் நடைபெற வுள்ளதால் எனது அரசியல் நட வடிக்கையை முடக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. இது பாஜகவின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே திரைப்பட தயாரிப் பாளர் உள்ளிட்ட‌ பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறேன். எடியூரப்பா, சதானந்த கவுடா உள் ளிட்ட பாஜகவினர் என் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். விரைவில் அவர் களது ஊழல்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன்’’ என்றார்.

இந்த சோதனை நடத்தப்பட்ட தற்கு, முன்னாள் முதல்வர் தேவகவுடா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x