

பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை நீக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் ஹெம் பாண்டே அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், “பண்டி கைக் காலம் தொடங்க உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட் கள் பதுக்கப்படுகிறதா என உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய பொருட் கள் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் 3 (2) (சி)-வது பிரிவின் கீழ், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மேலும் இந்த பொருட்கள் மீதான உள்ளூர் வரியை மாநில அரசுகள் நீக்க வேண்டும். அப்போதுதான் நுகர்வோருக்கு நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்” என கூறப்பட்டுள்ளது.