பா.ஜ.க.-வில் இணைந்தார் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.பி

பா.ஜ.க.-வில் இணைந்தார் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.பி
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஹோஸங்காபாத் காங்கிரஸ் எம்.பி. உதய்பிரதாப் சிங், பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார்.

அவரது இந்த நடவடிக்கையால், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2003- சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியப் பிரதேசம் பா.ஜ.க. கோட்டையாகி விட்டது.

நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ம.பி-யை தன் ஆதிக்கத்துகுள் கொண்டு வர காங்கிரஸ் கடும் பிரயத்தனம் செய்து வரும் வேளையில், ஹோஸங்காபாத் காங்கிரஸ் எம்.பி. உதய்பிரதாப் சிங், பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார்.

இதன் மூலம், ம.பி. மாநிலத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவது சாத்தியப்படும் எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in