

Woman injured in Pakistan shelling on LoC (Lead)
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலால் ஒரு பெண் காயமடைந்தார்.
இதுகுறித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மனிஷ் மேத்தா, பிம்பர் காலி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அப்போது நசீம் அக்தர் என்ற 35 வயதுப் பெண்ணுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்த தண்ணீர்த் தொட்டியின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.
தாக்குதல் நடத்தப்பட்ட பிம்பர் காலி பகுதி பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய இரு மாவட்டங்களில் உள்ளது. ஆனால் இன்றைய தாக்குதல் ரஜோரி பகுதியில் மட்டும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் அதிகாலை 4.15 மணியளவில் தொடங்கியது.
பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகள், தானியங்கி ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்திய நிலைகளைத் தாக்கியது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு உறுதியாகவும், திறம்படவும் பதிலடி கொடுத்து வருகிறது'' என்றார்.
பாகிஸ்தான் தாக்குதலில் வியாழக்கிழமை அன்று இரண்டு இந்திய வீரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.