

*
பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பாது காப்பு, கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான நிலையம் மீது ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். அதே அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் டெல்லி யில் நாசவேலைகளில் ஈடுபட நகருக்குள் ஊடுருவி இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை டெல்லி போலீஸார் உறுதிபடுத்தியுள்ளனர். டெல்லி யில் ஊடுருவியுள்ள தீவிர வாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கக்கூடும் அல்லது பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. தலைநகரின் பாது காப்புக்காக கூடுதல் துணை ராணுவ படை வீரர்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் டெல்லி போலீஸ் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஸி நேற்று உயர்நிலை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
டெல்லி விமான நிலையம், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பஸ் நிலையங் கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விஜபிக்களை தீவிரவாதிகள் கடத்த முயற்சிக்கக்கூடும் என்ப தால் அவர்களுக்காக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயிலில் வெடிகுண்டு?
டெல்லி, கான்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து டெல்லி-லக்னோ சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் காஜியாபாத் ரயில் நிலை யத்தில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
டெல்லி ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் முழுமையாக சோதனை செய் யப்படுகின்றன. மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனையும் நடைபெறுகிறது.