

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மீது ஷீ வீசிய இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர் மேதா குல்கர்ணிக்கு ஆதரவு கேட்டு கொத்ருட் என்ற இடத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனை அடுத்து கொத்ரூட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பிரச்சார நிகழ்ச்சியில் பேசுவதற்காக மேடை நோக்கி வந்த நிதின் கட்காரி மீது கூட்டத்தில் இருந்த இளைஞர் திடீரென ஷீ-வை வீசினார். ஆனால் ஷூ, கட்காரி மீது படாமல் அவருக்கு அருகே சென்று விழுந்தது.
இதனை அடுத்து, கூட்டத்தில் இருந்த இளைஞரை பாஜக-வினர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சில நேரம் பதற்றம் ஏற்பட்டது. கட்காரியை தாக்க முயன்ற இளைஞர் போதையில் இருந்ததாகவும், அவரது விவரம் குறித்து விசாரித்து வருவதாகவும் கொத்ருட் போலீஸார் தெரிவித்தனர்.