

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியம் கசிந்தது குறித்து அதிக அளவில் கவலைப்பட வேண்டிய தில்லை என்று கடற்படை தலைமை தளபதி அட்மிரல் சுனில் லன்பா நேற்று தெரிவித்தார்.
இந்திய கடற்படைக்கு 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 1 கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கப்பல் குறித்த ரகசிய ஆவணங்களை ஆஸ்திரேலி யாவின், ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை வெளியிட்டது அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
எனினும், ஆயுதங்கள் தொடர் பான ரகசியம் எதுவும் வெளியிடப் படவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறி யிருந்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு டிசிஎன்எஸ் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, ஸ்கார்பீன் தொடர் பான தகவலை மேற்கொண்டு வெளியிட ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோரி டிசிஎன்எஸ் நிறுவனம் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த விவகாரம் குறித்து இந்திய கடற் படை தலைமை தளபதி அட்மிரல் சுனில் லன்பா முதன்முறையாக டெல்லியில் நேற்று கூறியதாவது:
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியம் கசிந்த விவகாரம் குறித்து மிக தீவிரமாக ஆராய்ந்து வரு கிறோம். குறிப்பாக, இதுகுறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு டிசிஎன்எஸ் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளோம்.
அதேநேரம் இது அதிக அளவில் கவலைப்படக்கூடிய விஷயம் அல்ல. இதுகுறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் உயர்நிலைக்குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் செப்டம்பர் 20-ம் தேதி வாக்கில் அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.