

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவில் மொத்தமுள்ள 403 இடங்களில் 325 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 19-ம் தேதி புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். அப்போது சட்டம் ஒழுங்கு, மத மோதல் கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அவரது ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்தன.
தேர்தலில் அளித்த வாக் குறுதிகளின்படி வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் போதிய நிதி கஜானாவில் இல்லை. இதுதவிர, 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கும் ரூ.34,000 கோடி கூடுதல் நிதி தேவைப் படுகிறது. வேளாண் கடன் தள்ளுபடிக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.70,000 கோடி நிதி சுமை விழுந்ததால்அரசுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலையும் சரியில்லை என்று புகார் கூறுகின்றனர்.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் உள்ளிட்ட வாக் குறுதிகளும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆதித்யநாத் அரசு இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என காங்கிரஸும், பகுஜன் சமாஜும் குற்றம்சாட்டியுள்ளன.