

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமத் துக்குள் புகுந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாய மடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குட்டி மாவட்டம் மாவோ யிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கூறப்படு கிறது. இதனால் இம்மாவட்டத்தில் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மாவட்டத்தின் ரேடோதங் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்காக கிராம மக்கள் அனை வரும் அங்கு குவிந்திருந்தனர். கூட்டம் முடிந்ததும், 15 பேர் மட்டும் கிராம வளர்ச்சி குறித்து விவாதித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீ ரென கிராமத்துக்குள் புகுந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி யால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். படு காயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எதிர்ப்பை மீறி, கிராம சபை கூட்டப்பட்டதால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாவோ யிஸ்ட் தீவிரவாதிகள் இந்த தாக்கு தலை நடத்தியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.