

காஷ்மீர் பிரிவினைவாதத் தலை வர் யாசின் மாலிக் கைது செய்யப் பட்டார். மற்றொரு பிரிவினை வாதத் தலைவர் ஷபீர் அகமது ஷா வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.
காஷ்மீரில் அண்மையில் பெய்த கனமழையால் மாநிலத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீநகர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் களுக்கு உதவி செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் கோர நகர வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஸ்ரீநகரில் நேற்று சிறப்பு பக்ரீத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொழுகையின்போது சர்வதேச நாடுகளிடம் உதவி கோரப்படும் என்று வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.
இதில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் திட்டமிட்டிருந்தார். அவரது வருகையால் வன் முறை நேரிடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் ஹுரியத் அமைப்பைச் சேர்ந்த ஷபீர் அகமது ஷாவை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநரில் நேற்று குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த அந்த நகரின் லால் சவுக் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி, போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.