காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையை கைவிட வேண்டும்: சுதந்திர தின உரையில் மோடி முன்வைத்த 10 அம்சங்கள்

காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையை கைவிட வேண்டும்: சுதந்திர தின உரையில் மோடி முன்வைத்த 10 அம்சங்கள்
Updated on
2 min read

தீவிரவாதத்தால் பலன் இல்லை...

காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையை கைவிட வேண்டும்:

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அழைப்பு

நாட்டின் 70-வது சுதந்திர தின விழா அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் 3-வது ஆண்டாக மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

93 நிமிடங்கள் வரை நீடித்த அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

1. காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். வன்முறையால் யாருக்கும் எந்த பலனும் இல்லை.

2. செங்கோட்டை யில் இருந்தபடி இந்த இனிமையான தருணத்தில் ஒரு சில மக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன். பலுசிஸ்தான், கில்ஜித் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், அவர்களது பிரச்சினையை எழுப்பியதற்காக எனக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

3. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தீவிரவாதத்துக்கு பள்ளி குழந்தைகள் பலியானபோது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அதற்காக குழந்தைகள் கண்ணீர் சிந்தினார்கள். நாடாளுமன்றத்திலும் எம்பிக்கள் அழுதனர். இதுதான் மனிதத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

4. இந்தியாவில் தீவிரவாதத்துக்கு அப்பாவி மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம் மற்றொரு நாடு அதை நினைத்து கொண்டாடுகிறது. தீவிரவாதி புர்ஹான் வானியை தியாகியாக போற்றுகிறது. அந்நாட்டின் இரட்டை வேடத்தை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

5. தீவிரவாதம் மற்றும் வன்முறையை இந்தியா ஒருபோதும் ஊக்குவிக்காது. எனவே வன்முறை பாதையை தேர்ந்தெடுத்த இளைஞர்கள், அதை கைவிட்டு மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும். அமைதியான வாழ்க்கைக்கு இளைஞர்கள் திரும்ப வேண்டும்.

6. கடந்த 60 ஆண்டுகளில் 14 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 60 வாரங்களில் 4 கோடி வீடுகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

7. கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 1,500 கி.மீ தொலைவுக்கே புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட் டுள்ளன.

8. நடுத்தர மக்கள் வரி என்றாலே அஞ்சி நடுங்குகின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்கு வரி நடைமுறைகள் எளிமையாக்கப்படும். அந்த மாற்றம் விரைவில் நடக்கும்.

9. வருமான வரியாக செலுத்தப்பட்ட கூடுதல் தொகையை திரும்ப பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டி இருந்தது. தற்போது ஆன்லைன் மூலம் அந்த தொகையை திரும்ப பெறு வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

10. இந்தியா முழுமைக்குமான ஒரே சீரான வரி விதிப்பு முறை அமல் படுத்தப்படும்போது அது நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும். இத்தகைய வரி விதிப்பு முறையைக் கொண்டு வர உதவிய அனைத்து கட்சியினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிப்பது கடமையாகும். > விரிவாக வாசிக்க >>நாட்டின் பொருளாதாரத்தை ஜிஎஸ்டி வலுப்படுத்தும்: சுதந்திர தின விழாவில் மோடி பேச்சு

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in