

தெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள் கிழமை 5 மணி நேரத்துக்கும் மேலாக ஆண்மை பரிசோதனை நடத்தப் பட்டது. அதில் அவரது ஆண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரி வித்தன.
சக பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட தேஜ்பாலை 6 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பனாஜி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞாயிற்றுக் கிழமை அனுமதி அளித்தது.
5 மணி நேரம் பரிசோதனை
இந்நிலையில் பாலியல் புகார் வழக்கு நடைமுறைகளின்படி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் திங்கள்கிழமை அவ ருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப் பட்டது.
காலையில் சுமார் 5 மணி நேரம் அவருக்கு பல்வேறு பரிசோதனை கள் செய்யப்பட்டன. மதிய இடை வெளிக்குப் பின்னர் மீண்டும் அவருக்கு மருத்துவப் பரிசோதனை கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பரிசோதனை முடிவுகளில் அவரது ஆண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணையில் முன்னேற்றம்
தேஜ்பாலின் செல்போனை முக்கிய ஆதாரமாக வைத்து போலீ ஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
“பாதிக்கப்பட்ட பெண் நிருபருக்கு அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட விவரங்களைத் திரட்டி வருகிறோம், அவரது லேப்டாப்பை பறிமுதல் செய்து அதில் பதிவாகி யுள்ள தகவல்களையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்போதைய நிலையில் விசாரணை யில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கோவா போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.