மங்கள்யான்: பிரணாப், மன்மோகன், சோனியா, மோடி வாழ்த்து

மங்கள்யான்: பிரணாப், மன்மோகன், சோனியா, மோடி வாழ்த்து
Updated on
1 min read

மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், 'இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியிருப்பது ஒரு மைல்கல்.

நமது விண்வெளி விஞ்ஞானிகள் தேசத்துக்கு பெருமையளிக்கும் வகையில் முக்கியமான இலக்கை எட்டியுள்ளனர். இத்திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கின் ட்விட்டர் பக்கத்தில், 'இஸ்ரோ விஞ்ஞானிகள், செவ்வாயை ஆய்வு செய்யும் தங்கள் இலக்கை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "விண்வெளி ஆய்வுத் துறையில் நமது விஞ்ஞானிகள் வியத்தகு சாதனைபடைத்துள்ளனர். ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமிதம் கொள்ள வேண்டிய நேரமிது" என்று கூறியுள்ளார்.

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, " மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமான விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். உலக அளவில் இந்தியாவுக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.

செவ்வாயும், நமது பூமியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று கருதப்படுகிறது. மங்கள்யான் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு மூலம் இத்தொடர்பு குறித்து புதிய தகவல்கள் கிடைக்கும். மங்கள்யான் மூலம் இந்தியாவுக்கும் நன்மை ஏற்படும் என்று நம்புகிறேன்" என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in