

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி இன்று மேற்கொள்கிறார்.
நைஜீரிய துணை அதிபர் யேமி ஓசின்பஜோவின் அழைப்பின் பேரில், அன்சாரி முதலில் அங்கு செல்கிறார். வரும் 29-ம் தேதி மாலி செல்கிறார்.
இந்தியாவிலிருந்து மாலிக்கு துணை குடியரசுத் தலைவர் போன்ற உயர் பிரதிநிதிகள் செல்வது இதுவே முதல் முறை. மாலி பிரதமர் மோடிபோ கெய்டாவின் அழைப்பின்பேரில் அங்கு செல்கிறார் அன்சாரி. அன்சாரியுடன் அவரது மனைவி சல்மா, நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உயரதிகாரிகள் செல்கின்றனர். இத்தகவலை வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.