ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சீருடை

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சீருடை
Updated on
1 min read

ரயில்வே ஊழியர்களுக்கு 4 வகையான சீருடைகள் தனித்துவம் வாய்ந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 4 வகைகளும் சிறப்பாக இருப்பதால் சீருடையை இறுதி செய்ய முடியாமல் ரயில்வே அமைச்சகம் தவித்து வருகிறது. இதனால் சமூகவலைதளங்களில் 4 வகையான சீருடைகளையும் பதிவேற்றி, சிறந்த ஒன்றை தேர்வு செய்து தரும்படி மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

டிக்கெட் பரிசோதகர், வரவேற்பாளர், கார்டுகள், ஓட்டுநர்கள் உட்பட 13 லட்சம் ஊழியர்களில், முதல் கட்டமாக ரூ.50 கோடி செலவில் 5 லட்சம் ஊழியர்களுக்கு இந்த புதிய சீருடைகள் வழங்கப்பட வுள்ளன.

இந்த சீருடையை வடிவமைத்த ரித்து பேரி, ‘‘நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் வகையில், சீருடைகள் வடிவமைக்கப்பட் டுள்ளன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in