

எல்லையில் வீரர்களுக்கு மோசமான உணவு பரிமாறப் படுவதாக சமூகவலைதளத்தில் புகார் எழுப்பிய வீரர் தேஜ் பகதூர் யாதவின் விருப்பு ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அண்மையில் புகார் எழுப்பினார். தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கை செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தேஜ் பகதூரின் புகார் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. இந்நிலையில் தேஜ் பகதூர் விண்ணப்பித்திருந்த விருப்ப ஓய்வு மனுவை ராணுவ தலைமையகம் நிராகரித்திருப் பதாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தேஜ் பகதூர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருப்ப தால் அவரது மனு நிராகரிக் கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஜனவரி 30-ம் தேதி இது தொடர்பான தகவல் அவருக்கு தெரிவிக்கப் பட்டதாகவும் எல்லை பாதுகாப்புப் படை செய்திதொடர்பாளர் சுபேந்து பரத்வாஜ் கூறியுள்ளார்.
மேலும் தேஜ் பகதூர் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டையும் ராணுவ அதிகாரிகள் மறுத்தனர். அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.