

ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்த சசி தரூர், “உறுதி செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இப்படிப்பட்ட மதிப்பை குறைக்கும் விதமான தரக்குறைவான கூற்றுகளை நிறைய பார்த்தாகி விட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
சசி தரூரின் உதவியாளர் நாராயணனுடன் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிருபர் உரையாடியதாக டேப்களை வெளியிடப்பட்டது. அந்த உரையாடலில் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்தது தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றதாகவும், சுனந்தாவுக்கும், சசிதரூருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து சசி தரூர் திரிபுகள், தவறான சித்தரிப்புகள் முற்றும் முழுதான பொய்களின் கலவைகளை பத்திரிகையாளர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கொள்கை எதுவும் அற்ற நபர் ஒருவர் பிரச்சாரம் செய்து வருவதாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சசி தரூர்.