Last Updated : 24 Jan, 2017 09:48 AM

 

Published : 24 Jan 2017 09:48 AM
Last Updated : 24 Jan 2017 09:48 AM

தமிழகத்தில் ஜல்லிக்கட்டைப் போல கம்பளா விளையாட்டை நடத்துவதற்கு கர்நாடக அரசு அனுமதி தரவேண்டும்: பாஜக, மஜத ஆகிய கட்சிகள் போர்க்கொடி

தமிழகத்தில் சட்டப்படி ஜல்லிக் கட்டு நடத்தப்படுவதைப் போல கர்நாடகாவில் கம்பளா விளை யாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக, மஜக ஆகிய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படுவதைப் போல கர்நாடக மாநிலம் மங்களூருவில் கம்பளா விளை யாட்டு (சேற்றில் எருமை காளையை விரட்டி செல்வது) கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலங்கு நல அமைப்பினர் இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட போது, கம்பளா விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை யடுத்து சட்டப்படி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதை பின்பற்றி, கர்நாடக அரசும் கம்பளா போட்டி நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கம்பளா விளையாட்டு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்வ ருமான குமாரசாமி, ‘‘கர்நாடக மாநிலத்தில் உள்ள துளு மொழி பேசும் மக்களின் பாரம்பரிய விளை யாட்டான கம்பளாவில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை. இருப்பி னும் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது, பண்பாட்டு உரிமையை பறிப்பது போன்றது.

இதனை நீக்க கர்நாடக அரசு தேவையான நடவடிக்கை எடுத்து, கம்பளா விளையாட்டை நடத்த வேண்டும். தமிழகத்தில் இளைஞர்கள் போராடி ஜல்லிக்கட்டை மீட்டு இருப்பது போல, கர்நாடக மக்களும் போராடி பாரம்பரிய விளையாட்டை மீட்க வேண்டும். கர்நாடக மக்களவை உறுப்பினர்களும் கம்பளா விளையாட்டுக்கு மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற்றுத்தர வேண்டும். தேசிய அளவில் கர்நாடக மாநிலத்துக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்றார்.

இதே போல மங்களூரு, ஷிமோகா, ஹாசன் ஆகிய இடங்களில் பாஜகவினர் கம்பளா போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அப்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக அரசைப் போல கம்பளா போட்டி நடத்த தனிச்சட்டம் இயற்ற வேண் டும். இல்லாவிடில் பாஜக சார்பாக காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கிரஸாரும் போராட்டம்

இதனிடையே மைசூருவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சோம சேகர் தலைமையில் காங்கிரஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சோமசேகர், ‘‘தடை செய்யப்பட்டுள்ள கம்பளா விளையாட்டு போட்டியை நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். காவிரி, மகதாயி ஆகிய நதிநீர் பிரச்சினைகளில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு எதிராக செயல்படு கிறது. இதனைத் தடுக்க கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 17 பாஜக எம்பிக்களும் தவறி விட்டனர். கம்பளா போட்டியை மத்தியில் ஆளும் பாஜக அரசு நடத்தாவிடில், காங்கிரஸ் சார்பாக டெல்லி யில் போராட்டம் நடத்தப் படும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x