அயோத்தி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

அயோத்தி பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
Updated on
1 min read

அயோத்தி ராமர் கோயில் பிரச் சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் பத்திரிகையான பாஞ்சஜன்யாவுக்கு அவர் அளித் துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது:

அயோத்தி பிரச்சினைக்கு நீதி மன்றத்துக்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நான் வரவேற்கிறேன். இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி அயோத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்படும் இறைச்சிக் கூடங்களை மூடுவது தொடர்பாக கடந்த 2015-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் நடப் பாண்டில் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அந்த உத்தரவுகளையே போலீ ஸார் இப்போது அமல்படுத்தி வருகின்றனர்.

சைவ உணவு உடல் நலனுக்கு நல்லது. எனினும் இந்த விவகாரத் தில் கட்டுப்பாடு விதிக்க விரும்ப வில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களின் முன் னேற்றத்துக்காவும் எனது அரசு பாடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in