

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 9 ஆண்டு கள் தண்டனை அனுபவித்து விடு தலையான ரங்கநாத் பெங்களூரு வில் நேற்று காலமானார்.
பெங்களூருவில் உள்ள பசவண்ணகுடியை சேர்ந்தவர் ரங்கநாத் (60). இவர் வீடு, காலி மனை தரகு தொழில் செய்து வந்தார். 1991 மே 21-ம் தேதி இரவு பெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் படு கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவராசன், சுபா உள்ளிட்டோர் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி வந்தனர்.
அப்போது சிவராசன், சுபா, ஓட்டுநர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேருக்கு ரங்கநாத் சில நாட்கள் தனது வீட்டில் அடைக் கலம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு இந்திைராநகர், கோனனே குன்டே உள்ளிட்ட இடங்களில் வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்தார். இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. ரங்கநாத் கைது செய்யப்பட்டு ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரங்கநாத் உள்ளிட்ட 27 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் ரங்கநாத்துக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலையான இவர், பெங்களூருவில் வசித்து வந்தார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் நேற்று அதிகாலை காலமானார். பசவண்ணகுடியில் உள்ள ரங்கநாத்தின் வீட்டில் வைக் கப்பட்டிருந்த அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது சமூக செயற்பாட்டாளர் பேட்ரிக், கர்நாடகத் தமிழ் அமைப்புகளை சேர்ந்த மணிவண்ணன், இல. பழனி உள்ளிட்டோரும் ரங்கநாத் தின் உடலுக்கு அஞ்சலி செலுத் தினர். பனசங்கரியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.