Published : 18 Jun 2016 09:04 AM
Last Updated : 18 Jun 2016 09:04 AM

அழிவின் விளிம்பில் உள்ள 700 கோயில் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை: ஒடிஸா மாநில அரசு முடிவு

ஒடிஸாவில் பழங்குடியின கலாச் சாரத்தின் முக்கிய அங்கமாகத் திகழும், 700 கோயில் காடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

கிராமங்களில் இயற்கை வளம் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உறுதிப்படுத்த அரிய வகை மரங்கள், தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கு கோயில் காடுகள் பழங்காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன.

புனித தோப்புகளாக கருதப் பட்டு வந்த இவை, காலமாற்றத் தால் அழிந்து வருகின்றன. எனி னும், பழங்குடியினர் வசிக்கும் சில பகுதிகளில் இந்த கோயில் காடுகள் இன்னமும் பயபக்தியுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் கோயில் காடுகள் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர். எனினும், சுமார் 13,000 கோயில் காடுகள் மட்டுமே முறை யாக ஆவணப்படுத்தப்பட்டுள் ளன. இதில், ஒடிஸா மாநிலத்தில் 2,100 கோயில் காடுகள் அடை யாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் 67,000 வகையான தாவரங்கள் உள்ளதாக கூறப்படு கிறது. ஒடிஸாவின் மொத்த மக்கள் தொகையில், 22.8 சதவீதம் பேர் பழங்குடியினர். 62 வகையான பழங்குடி சமூகங்கள் ஒடிஸா வில் உள்ளன. எனவே, பழங்குடியின கலாச்சாரத் தின் அங்கமாகத் திகழும் கோயில் காடுகள் இம்மாநிலத்தில் இன்ன மும் எஞ்சியுள்ளன.

இந்நிலையில், அழியும் விளிம் பில் உள்ள கோயில் காடுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஒடிஸா மாநில அரசு தொடங்கி யுள்ளது. ‘இந்தாண்டு மட்டும், 700 கோயில் காடுகள் உள்ளூர் சமூகக் குழுக்களுடன் இணைந்து பாது காக்கப்படும்’ என ஒடிஸா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுரேஷ் மொஹபத்ரா தெரிவித்தார்.

வரும், 2019-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில் காடுகளும் முழுமை யாக பராமரிக்கப்பட்டு, சுற்றுச் சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில், சாமித்தோப்பு, சோலைக்காடு உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் 1,670 கோயில் காடுகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின் றன. இதில், கொல்லிமலை, தேனி, சிவகாசி, தென்காசி பகுதிகள் உட்பட, 499-க்கும் அதிகமான கோயில் காடுகளை சென்னையைச் சேர்ந்த சிபிஆர் அறக்கட்டளை ஆவணப்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x