

மத்தியப்பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், அதாவது 1.9 சதவீதம் பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நோட்டா (நன் ஆஃப் த எபவ்) வசதியை பயன்படுத்தியுள்ளனர்.
மாநில முதன்மை தேர்தல் அலுவலகம் அளித்துள்ள தகவலின்படி, இம்மாநிலத்தில் 2,633 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 144 வாக்காளர்கள் நோட்டா வசதியை பயன்படுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 66 லட்சத்து 31,759 பேர். இதில் 3 கோடியே 38 லட்சத்து 49,550 பேர் வாக்களித்துள்ளனர். நோட்டா வசதியை சிந்துவாரா மாவட்டத்தில் அதிகபட்சம் 39,235 பேரும், குறைந்தபட்சமாக பிந்து மாவட்டத்தில் 3,378 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.