ராணுவ உடையில் ஊடுருவிய தீவிரவாதிகள்: யூரி தீவிரவாத தாக்குதல் குறித்து புதிய தகவல்கள்

ராணுவ உடையில் ஊடுருவிய தீவிரவாதிகள்: யூரி தீவிரவாத தாக்குதல் குறித்து புதிய தகவல்கள்
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் முகாமுக் குள் ராணுவ உடையில் ஊடுருவி யிருப்பது தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், யூரியில் இந்திய ராணுவத்தின் 12-வது பிரிகேட் தலைமையகம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. முகாமை சுற்றி கம்பி வேலி போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 18-ம் தேதி அதிகாலையில் இந்த முகாம் மீது 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த 4 தீவிரவாதிகள் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ராணுவ உடையில் இருந்த 4 தீவிரவாதிகளும் கம்பி வேலியை துண்டித்து முகாமுக்குள் நுழைந்துள்ளனர். ராணுவ வீரர்களை போலவே முடி திருத்தமும் செய்துள்ளனர். தற்கொலைப்படை தீவிரவாதி களுக்கான எவ்வித சாயலும் அவர்களிடம் இல்லை.

முகாமின் முழு வரைபடமும் அவர்களிடம் இருந்திருக்கக்கூடும். முகாமுக்குள் நுழைந்ததும் சமையல் அறைக்கு சென்றுள்ளனர். அதன் அருகில் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்துள்ளனர்.

அங்கிருந்துகொண்டு முகாமில் இருந்த டீசல் பேரல்களை சரமாரியாக சுட்டு தீப்பிடிக்கச் செய்துள்ளனர். இதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

கூடாரங்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்த வீரர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் வெளியே ஓடிவந்தபோது அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

எனினும் தீவிரவாதிகள் துப் பாக்கியால் சுடத் தொடங்கிய 12 நிமிடங்களில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டோம். தனி யாகப் பிரிந்து சென்ற மற்றொரு தீவிரவாதியை அங்கிருந்து 40 மீட்டர் தொலைவில் சுட்டு வீழ்த்தினோம்’ என்றார்.

வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றம்

இந்த தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ- முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதலை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுபடி இவ்வழக்கு நேற்று என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. அவர்கள் நேற்று வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையை தொடங்கினர்.

ராஜ்நாத் ஆலோசனை

யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in