

கர்நாடகாவின், தும்கூர் மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளியில் வித்யாவர்த்தி உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பாஜக முன்னாள் எம்எல்ஏ கிரண் குமாருக்கு சொந்தமானது. இங் குள்ள விடுதியில் 50-க்கும் மேற் பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மாணவர்களுக்கு உணவாக சப்பாத்தி, சோறு, குழம்பு, பீட்ரூட் பொரியல் வழங்கப்பட்டது.
இதை முதலில் சாப்பிட்ட மாண வர்களில் 4 பேரும் விடுதிக் காவல ரும் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இவர்கள் ஹூளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலை யில் சாந்தமூர்த்தி (15), ஆன்க்காஸ் பல்லக்கி (14), ஸ்ரேயாஸ் (14) என்ற 3 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக பள்ளி முன் பாக பெற்றோர் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹூளியூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பள்ளியின் தாளாளர் கிரண் குமார், தலைமை ஆசிரியர் மஞ்சுநாத், விடுதிக் காப்பாளர் குருநாத் உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.ஆர்.மோகன் ராஜ் சம்பவம் நடந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித் துள்ளார்.