Last Updated : 03 Sep, 2016 04:16 PM

 

Published : 03 Sep 2016 04:16 PM
Last Updated : 03 Sep 2016 04:16 PM

பாகிஸ்தான் பெண்ணை கரம் பிடித்த காஷ்மீர் போலீஸ் அதிகாரி

காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்து வரும் கலவரங்களுக்கு மத்தியில் எல்லையால் பிரிக்கப்பட்ட இரு உறவுகள் ஒன்றான நிகழ்வு நடந்துள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடந்தும் வேளையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த ஃபைசா கிலானி என்ற பெண்ணை காஷ்மீரை சேர்ந்த துணை காவலதிகாரியான ஓவைஸ் கிலானி மணந்தார்.

மணப்பெண் ஃபைசா கிலானி இஸ்லாமபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

எல்லையால் பிரிந்த சொந்தம்

ஓவைஸ் கிலானியும், ஃபைசா கிலானியும் உறவினர்கள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை இவர்களது சொந்தத்தையும் பிரித்துவிட்டது.

ஓவைஸின் தந்தை கடந்த 2014ம் ஆண்டு எல்லையால் பிரிக்கப்பட்டு தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் தனது குடும்பத்தை பார்க்க சென்றுள்ளார். அந்த சந்திப்பில்தான் ஒவைஸுக்கும், ஃபைசாவுக்கும் இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஓரண்டாக அவர்களின் திருமணம் காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே நிலவும் பிரச்சனையாலும், பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்கு வரும் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதாகும் திருமணம் பல மாதங்களாக தள்ளி வைக்கப்பட்டு வந்துள்ளது.

காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் கலவரம் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரு குடும்பத்தினரின் உறவினர்களும் அவர்களின் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்க ஸ்ரீ நகரில் உள்ள ஓட்டலில் ஓவைஸ் கிலானி , ஃபைசா கிலானயின் திருமணம் இனிதாக முடிவடைந்துள்ளது. எல்லையால் பிரிக்கப்பட்ட சொந்தம் இன்று எல்லை கடந்து தங்களது உறவை நீட்டித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x