

காஷ்மீரில் கடந்த 3 நாட்களாக ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது குறித்த மத்திய அரசின் மவுனம் அதிர்ச்சியளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
“மத்திய அரசின் மவுனம் அந்த அரசின் காஷ்மீர் கொள்கையின் முழு தோல்வியை உறுதி செய்கிறது, எந்த ஒரு அர்த்தமுள்ள அரசியல் நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மரணங்கள் பற்றி மோடி அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? ராணுவ வீரர்களின் தியாகம் போன்ற வாய்ப்பேச்சுக்கள் தேர்தல் கால பிரசங்கங்களுக்கு மட்டுமே உதவக்கூடியதோ? இன்னும் எவ்வளவு ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால் மத்திய அரசு செயல்படும்?” என்று கடுமையாக சாடியுள்ளார்.
காஷ்மீரில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் 4 ராணுவத்தினர் பலியாகினர். இதில் அப்பாவி மக்கள் இருவரும் பலியாகியது குறிப்பிடத்தக்கது.