

மத்தியில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) ரூ.1,400 கோடி மதிப்பில் நவீன ராடார் கள் பொருத்தப்பட்ட 3 கண்காணிப்பு விமானங்களை வாங்க பிரேசில் நாட்டின் எம்பரர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தைப் பெற எம்பரர் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த லஞ்சப் புகார் மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால் இதுபற்றி விரிவான விசாரணை நடத்துமாறு சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் கிரிமினல் சதியாக இருந்தால் சிபிஐ விசாரிக்கும் என்றும் நடை முறை சார்ந்த பிரச்சினையாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சகமே விசாரிக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஏற்கெனவே தெரி வித்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.