எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ராணுவத் தளபதி ராவத் பேட்டி

எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ராணுவத் தளபதி ராவத் பேட்டி
Updated on
1 min read

எல்லை தாண்டிய தீவிரவாதத் துக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுக்கும் என ராணு வத்தின் புதிய தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அணு ஆயுதங்களை பிரயோகிப்பது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிடும் தகவல் களைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல் களால் எல்லையை பாதுகாக்கும் இந்தியாவின் நடவடிக்கைகளைத் தடுத்துவிட முடியாது.

எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் கொடுக்கும் பதிலடி தீவிரவாதி களுக்கும், அவர்களை ஆதரிக் கும் சக்திகளுக்கும் வலி ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்தியாவின் பதிலடி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

இனிவரும் காலங்களில் எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா தரும் பதிலடியானது, ஊடுரு வலையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் வியூகத்தை பாகிஸ் தான் மறுபரிசீலனை செய்ய வைக்கும் வகையில் இருக்கும்.

எல்லைப் பகுதியில் ஆக்கிர மிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் எப்போதும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்தே இயங்குகின்றனர். இந்த நிலைமை விரைவில் மாறும்.

இவ்வாறு ராவத் கூறினார்.

தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் முன்பாக, கடந்தாண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் ராவத் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in