Last Updated : 03 Jun, 2017 02:49 PM

 

Published : 03 Jun 2017 02:49 PM
Last Updated : 03 Jun 2017 02:49 PM

காஷ்மீரிகளின் கைகள் கல் எறிவதற்கானது அல்ல; இளைஞர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ராஜ்நாத் சிங்

கல்வீச்சுக்கு எதிராக ராணுவம் 'மனிதக் கேடயம்' பயன்படுத்திய சம்பவம்: பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்க ராஜ்நாத் மறுப்பு

காஷ்மீரிகளின் கைகள் கல் எறிவதற்கானது அல்ல. காஷ்மீர் இளைஞர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என உள்துறை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆனால், காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் முன் ஒருவரைக் கட்டி மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி கலவரப் பகுதிக்குள் ராணுவத்தினர் சென்ற சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்று ஆண்டு கால நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், "காஷ்மீரில் நடைபெற்றுவரும் மோசமான போரை நிறுத்த புதிய உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் கருத்தை அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஏற்றுக் கொண்டுள்ளதில் தவறு ஒன்றும் இல்லை.

சில நேரங்களில் இது போன்ற கேள்விகள் எதிர்கொள்வதில் சிக்கல் இருக்கிறது. இத்தகைய கேள்விகளுக்கு நேரடியாக ஆம், இல்லை என பதில் சொல்லிவிட முடியாது.

ஜம்மு - காஷ்மீரில் நிலவரம் தற்போது முன்னேறியுள்ளது. உலகளவில் முஸ்லிம் மக்கள்தொகை அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா 2-ம் இடத்தில் இருக்கிறது. அப்படி இருந்தும்கூட ஐ.எஸ். பயங்கரவாதிகளால் இந்தியாவில் காலூன்ற முடியவில்லை.

அதேபோல் கடந்த ஆண்டு இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 5 முக்கிய தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது அந்தத் இயக்கித்தனரை முற்றிலுமாக நொறுக்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு குர்தாஸ்பூர், பதான்கோட் என இரண்டு தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. எல்லையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஊடுருவல் 45% குறைந்துள்ளது.

காஷ்மீரிகளின் கைகள் கல் எறிவதற்கானது அல்ல. காஷ்மீர் இளைஞர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைப்புகள் அவர்களை தவறாக வழிநடத்துகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தத் தீர்வு காணும் முன் காஷ்மீரிகளின் நம்பிக்கையை வென்றெடுப்போம்" என அவர் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x