

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், இன்று காலை 6.25 மணியளவில் அம்மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் வீட்டின் அருகே குண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்தை
நேற்றும், இம்பாலில் முதல்வர் வீட்டிலிருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அடுத்தடுத்து குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸார் அப்பகுதியில் தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.