சிபிஎஸ்இ பள்ளிகளில் பயணிக்கும் கிராபிக்ஸ் நாவல்கள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயணிக்கும் கிராபிக்ஸ் நாவல்கள்
Updated on
1 min read

சிபிஎஸ்இ பள்ளிகளில் கிராபிக்ஸ் நாவல்கள் மூலம் மாணவர்களுக்கு கதைப் பகுதிகள், வரலாற்று நிகழ்வுகள் விளக்கப்பட்டு வருகின்றன.

ஆயிரம் வார்த்தைகள் மூலம் உணர்த்த முடியாத கருத்தை ஒரு புகைப்படத்தின் மூலம் எளிதாக உணர்த்தலாம். இதனை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையே கிராபிக்ஸ் நாவல்கள். வெவ்வேறு இடங்களில் தயாரான இவ்வகை நாவல்களைப் பள்ளிகளில் பொதுமைப்படுத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இக்கிராபிக்ஸ் நாவல்கள் மகாபாரதம் முதல் மார்க்ஸ் வரை தங்களை பார்வையாளர்களிடம் அடையாளப்படுத்தி வந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

சமீபத்தில்தான் கிராபிக்ஸ் நாவல்களை அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு செல்ல 'படங்கள் மூலம் சொல்லப்படும் கதைகள்' என்ற தலைப்பில் டெல்லியில் தீவிரப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

காமிக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் நாவல்களுக்கு இடையேயுள்ள வித்தியாசம் என்னவென்றால், காமிக்ஸ்கள் தொடர்களாக இல்லாமல் கூட பார்க்கலாம். அதே வகையைச் சேர்ந்த கிராபிக்ஸ் நாவல்கள் கதைகள் மூலம் மட்டுமே நகர்த்தப்படும் தன்மை கொண்டது.

கிராபிக்ஸ் நாவல்களில் எழுத்தாளர்கள் கூற வரும் அனைத்துக் கருத்துகளையும் ஒருங்கே புரிய வைக்கும் கட்டாயம் உள்ளது.

கிராபிக்ஸ் நாவல்கள் பிரச்சாரத்தின் இயக்குனர் கிரிஜா ஜுன்ஜுன்வாலா கூறியதாவது:

கிராபிக்ஸ் நாவல்கள் காமிக் புத்தகங்களிருந்து வேறுப்பட்டவை. கிராபிக்ஸ் நாவல்கள் தொடராக வருவதில்லை. மேலும் இவற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கருத்துகள் நீக்கப்படுகின்றன.

கிராபிக்ஸ் நாவல்களை பொருத்தவரை அறிவார்ந்த மற்றும் முதிர்ந்த கருத்துக்கள் கையாளப்படுகின்றன.

சிபிஎஸ்இயின் பரிந்துரைக்கும் எவரெஸ்டை வெல்வது, மதர் தெரஸா, சேரியின் தேவதை போன்ற தலைப்புகளில் கிராபிக்ஸ் நாவல்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.

ஆசிரியர்கள், சிறுகதை பகுதிகள், வரலாற்று நிகழ்வுகள், கணிதம் போன்ற பாடங்களும் கிராபிக்ஸ் நாவல்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.

டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியின் துணை பேராசிரியர், வாஃபா ஹமிது கூறுகையில், "பாரம்பரிய கதைகள் என்பது வாய்வழியாகக் கூறப்பட்டு வந்த பாரம்பரியத்தின் பின்ணனியில் வந்தவை. எனவே மாணவர்களுக்கு மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகளை கிராபிக்ஸ் நாவலுடன் கூறும்போது எளிதாக உள்வாங்கி கொள்வார்கள்" என்றார்.

இறுதியாக கிரிஜா ஜுன்ஜுன்வாலா கிராபிக்ஸ் நாவல்கள் பற்றி கூறுகையில், ”கிராபிக்ஸ் நாவல்கள் எந்த வயதில் உள்ள பார்வையாளர்களாலும் ரசிக்கப்படுவை. பல வகைகளில் கிராபிக்ஸ் நாவல்கள் வந்துள்ளன. பல எழுத்தாளர்கள் கிராபிக்ஸ் நாவல்களை தங்கள் படைப்பிற்கு தேர்தெடுத்து உள்ளனர். கிராபிக்ஸ் நாவல் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமே, கதை தத்து எடுக்கப்படும் எழுத்தாளர்களின், கதையின் ஒட்டம், நடை, எழுத்தாளர்களின் நம்பகத்தன்மை எந்நிலையுலும் பாதிப்படையாது என்றார்”.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in